தினகனிடம் நள்ளிரவு வரை விசாரணை. இன்றும் ஆஜராக உத்தரவு

தினகனிடம் நள்ளிரவு வரை விசாரணை. இன்றும் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் அளித்ததாகக் கூறப்படும் புகாரில், டிடிவி தினகரனிடம் கடந்த இரண்டு நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் இன்று மாலை 5 மணிக்கும் தினகரன் ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே விசாரணை நடைபெறும் இடத்திற்கு இன்று தினகரனின் வழக்கறிஞர் விரைந்துள்ளதால் இன்று போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இன்று விசாரணை முடிவடைய வாய்ப்பு இருப்பதாகவும், விசாரணையின் முடிவு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஜாமீன் பெறுவதற்காக தினகரன் வழக்கறிஞர் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டிடிவி தினகரனிடம் மட்டுமின்றி அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்தணனும் ஆகியோர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply