செயலி புதிது: பண்டமாற்றுச் செயலி

செயலி புதிது: பண்டமாற்றுச் செயலி

பயன்படுத்திய பொருட்களை வேறு நல்ல பொருட்களுக்கு மாற்றிக்கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்வாப்ட் செயலி’ அறிமுகமாகியுள்ளது.

இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ததும், பயனாளிகள் தாங்கள் மற்றவர் களுடன் பரிமாறிக்கொள்ள விரும்பும் பொருட்களைப் பற்றிய தகவலைப் பதிவேற்றலாம். மற்ற பயனாளிகள் இப்படிப் பதிவேற்றியுள்ள பொருட்களையும் பார்வையிடலாம். அவற்றில் ஏதேனும் பிடித்திருந்தால் தங்கள் வசம் உள்ள பொருளுடன் மாற்றிக்கொள்ளலாம். பொருத்தமான பொருளைத் தேர்வு செய்வதற்காகப் பயனாளிகளுடன் இணைய அரட்டையில் ஈடுபடும் வசதியும் இருக்கிறது. பொருட்களின் ஒளிப்படத்துடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

இப்படிப் புத்தகம், செயற்கை நகைகள், பழைய சோபா என எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என ஸ்வாப்டு செயலி தெரிவிக்கிறது. பேஸ்புக் பயனர் பெயரைக் கொண்டு உள்ளே நுழையலாம். தரவுகளைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு அனுமதிகளைப் பெற்ற பின் உள்ளே அனுமதிக்கிறது.

அதன் பின் பயனாளிகள் தங்களுக்கான அறிமுகப் பக்கத்தை உருவாக்கிக்கொண்டு இந்தச் சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

பண்டமாற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்தச் செயலி சுவாரசியத்தை அளிக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன்களில் செயல்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: http://swapd.in/

Leave a Reply