சுக்மா தாக்குதலுக்கு பதிலடி: மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொலை

சுக்மா தாக்குதலுக்கு பதிலடி: மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொலை

சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள், கடந்த திங்கள்கிழமையன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் சிக்கி, பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். அதில், தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் நான்கு பேரும் அடங்குவர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், சுக்மா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply