ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட ஒரே நாளில் 138 அதிகாரிகள் இடமாற்றம். உபி முதல்வர் அதிரடி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட ஒரே நாளில் 138 அதிகாரிகள் இடமாற்றம். உபி முதல்வர் அதிரடி

உத்தரபிரதேச முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் யோகி ஆதித்யநாத், நேற்று ஒரே நாளில் 138 அரசு உயரதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். இவர்களில் 84 ஐஏஎஸ் மற்றும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பதவியேற்ற ஒருசில நாளில் சில ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று திடீரென இத்தனை அதிகாரிகள் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த பணியிடமாற்றம் மாநில அரசின் நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த 50க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply