வடகொரியா வைத்திருப்பது பொம்மை ஆயுதங்களா?
அணு ஆயுத சோதனைகள் தொடர்ந்து செய்து அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை தகர்ப்போம் என மிரட்டி வருகிறது வடகொரியா.
வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல் சொங்கின் 105வது பிறந்த நாள் தினம் ஏப்ரல் 15ம் தேதி நடந்தது. இதற்காக பியோங்யாங்கில் மிக பிரமாண்டமாக பாரியா ராணுவ அணிவகுப்பு அதிபர் கிம் ஜாங்-உன் முன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த அணிவகுப்பு புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ நிபுணர் குழு, அணி வகுப்பில் பல ராணுவ வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது பொம்மை ஆயுதங்கள் என்றும் அவர்களில் பலர் அணிந்திருந்த கண்ணாடி கூட போலி என கண்டறியப்பட்டுள்ளது.