‘கட்டப்பா’ பாகுபலியை கொலை செய்ததன் ரகசியம் இதுதான்

‘கட்டப்பா’ பாகுபலியை கொலை செய்ததன் ரகசியம் இதுதான்

இன்று வெளியாகியுள்ள ‘பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று பாகுபலியை கட்டப்பாவை ஏன் கொலை செய்தார் என்பதுதான். இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று விடை கிடைத்துள்ளத். பாகுபலியை கட்டப்பா கொலை செய்ததன் காரணம் இதுதான்:

மகிழ்மதியின் அரசனாக பதவியேற்கும் பல்லாலத்தேவன், பாகுபலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக பாகுபலி,பாகுபலியின் மனைவி தேவசேனா மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோரை சிறை பிடிக்கிறான். இவர்களில் யாராவது ஒருவரை கொலை செய்தால் மட்டுமே, மீதமிருக்கும் இருவரை விடுவிப்பதாக , மகிழ்மதி அரச வம்சத்தின் விசுவாசியான கட்டப்பாவிற்கு பல்லாலத்தேவன் நிபந்தனை விதிக்கிறான்.

’குழந்தையை கொலை செய்தால், பாகுபலியும் அவனது மனைவியும் உயிரை விட்டுவிடுவார்கள் அல்லது தேவ சேனாவை கொலை செய்தால், பாகுபலி உயிரை விட்டுவிடுவான். இதனால் குழந்தை அனாதையாகிவிடும். எனவே பாகுபலியை கொலை செய்தால் மட்டுமே, பாகுபலியின் வாரிசு,தேவ சேனாவின் அரவணைப்பில் வளர்ந்து மீண்டும் மகிழ்மதி அரசனாவான்.’ என கட்டப்பா முடிவு செய்கிறான். இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல், பாகுபலியை கட்டப்பா கொலை செய்கிறான்.” என படத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை பாகுபலி 2′ படத்தை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply