நடு ரோட்டில் சட்டை கிழிய சண்டை போட்ட சீரியல் நடிகையும், ராதிகாவின் மேனேஜரும். பரபரப்பு தகவல்
நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வரும் ‘வாணி ராணி’ மெகா சீரியலின் மேனேஜர் சுகுமாறன் ஆழ்வார் திருநகரில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டதால் அந்த தனிமையை பயன்படுத்தி ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வரும் நடிகை சபிதா ராயை தன் வீட்டிற்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சை ஏற்பட்டுள்ளதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சுகுமாறன் நடிகை சபிதாவை வீட்டைவிட்டு வெளியே துரத்தியுள்ளார். ஆனால் வீட்டின் வெளியே நின்று சபிதா, சுகுமாறனுடன் வாக்குவாதம் செய்ததோடு ஒரு கட்டத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்டார். சுகுமாறன், சபிதாவின் முடியை பிடித்து அடிக்க பதிலுக்கு நடிகை சபிதா, சுகுமாறனின் சட்டையை கிழித்து தாக்க அந்த இடமே ஒரே களேபரம் ஆகியது.
இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.