இளையதளபதி விஜய்யுடன் ‘நேற்று இன்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் சந்திப்பு
விஷ்ணு, மியா ஜார்ஜ் நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், அதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் சற்று முன்னர் இயக்குனர் ரவிகுமார், இளையதளபதி விஜய்யை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரவிகுமாரின் மனைவியும் இருந்தார். விஜய்யுடன் ரவிகுமார் தம்பதிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இது ஒரு சாதாரண சந்திப்பா? அல்லது அடுத்த படத்திற்கு கதை கேட்கும் சந்திப்பா? என்பது குறித்த தகவலை இரு தரப்பினர்களும் வெளியிடவில்லை.