திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் நிலக்கரித்துண்டு. பெண் பக்தர் புகார்

திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் நிலக்கரித்துண்டு. பெண் பக்தர் புகார்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி திருமலை கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நிலக்கரி துண்டு இருந்ததாக பெண் ஒருவர் தேவஸ்தானம் மீது புகார் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்  பக்தர்களுக்கு கடந்த ஆண்டுகளாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு என்னவெனில் இந்த 300 ஆண்டுகளில் நிறம், அளவு, சுவை, மணம் என எதுவுமே மாறாமல் லட்டு இருப்பதுதான். அந்த அளவுக்கு இந்த லட்டு சிறப்புடையது

கையால் உருட்டி தந்த காலத்திலும் இயந்திரத்தில் செய்யப்படும் இந்த காலத்திலும் ஒரே சுவையுடன் திருப்பதி லட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருகின்றது.

அதேபோல் லட்டு தயாரிக்கும் இடத்தில், வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. லட்டின் சுத்தம், சுகாதாரத்தை அறிய தனியாக லேப், தரக்கட்டுப்பாடு, அதற்கான சோதனை எல்லாம் இருக்கின்றன.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய லட்டு ஒன்றில் நிலக்கரி துண்டு இருந்ததாக பெண் பக்தர் ஒருவர் தேவஸ்தானத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply