மம்தாவை திருநங்கை என்றே அழைப்பேன். பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

மம்தாவை திருநங்கை என்றே அழைப்பேன். பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்தே பாஜக தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, கண்டனமும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராகிய ஷ்யாமபதா மண்டல், மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து  ஒன்றை தெரிவித்து அனைவரிடமும் வாங்கிக்கட்டி கொண்டு வருகிறார்.

மேற்கு வங்க மாநிலம் மித்னாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷியாமபதா மண்டல், மம்தா பானர்ஜி ஆணா ? பெண்ணா? என்று சந்தேகம் உருவாகியுள்ளதாகவும்,. இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்லும் போது, தன்னை ஒரு இஸ்லாமியர் என்று நிரூபிக்கத் தேவையில்லை என்றும் அதேபோல் இந்து கோவிலுக்குச் செல்லும் போது, தன்னை இந்து என நிரூபிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மம்தா பானர்ஜி இஸ்லாமியர்கள் விழாவில் கலந்து, அவர்களுடைய மதச் சடங்குகளைச் செய்தது, இந்து சமூகத்திற்கு அவமானத்திற்கு உரிய செயலாகும் என்று கூறிய மண்டல், அதன் பின்னர் மம்தா பானர்ஜி ஆணா? பெண்ணா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அவரை திருநங்கை என்றே அழைக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மண்டலின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக தலைமை  கண்டனம் தெரிவித்ததோடு இனிமேல் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply