ரஷ்ய அதிபர் புதின் கையில் மார்பகங்கள். இளம்பெண்களின் புதிய டிரெண்ட்
ரஷ்ய இளம்பெண்கள் இடையே தற்போது புதிய டிரெண்டு ஒன்று பரவி வருகிறது. அதுதான் வித்தியாசமான டீ-சர்ட், இந்த டீசர்ட்டை பெண்கள் அணிந்தவுடன் அதில் உள்ள அதிபர் புதினின் படம் அவர்களுடைய மார்பகங்களை கையில் ஏந்துவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் மூலம் தாங்கள் அதிபர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதாக இளம்பெண்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிபர் புதின் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த டீ-சர்ட் மூலம் அதிபரின் செல்வாக்கு இளம்பெண்களின் மூலம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த டிசைன் டீ-சர்ட்டை வடிவமைத்த இயா சடல்ஸ்கியா என்பவர் கூறியபோது, ‘அதிபர் புதின் ஒரு அரசியல்வாதி மட்டும் அல்ல, நீண்ட காலம் எங்களுடைய மனதில் வாழும் ஒரு தலைவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.