சிரியா போர் குறித்து முக்கிய முடிவெடுக்க டிரம்ப்-புதின் ஆலோசனை

சிரியா போர் குறித்து முக்கிய முடிவெடுக்க டிரம்ப்-புதின் ஆலோசனை

அமெரிக்க அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் வெற்றி பெற ரஷ்ய அதிபர் புதின் மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்வதை போல் அமெரிக்காவின் பரம எதிரியாக கருதப்பட்ட ரஷ்யாவுடன் அதிபர் டிரம்ப் நல்லுறவுடன் உள்ளார். அடிக்கடி உலக நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் டெலிபோனில் பேசி கொள்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் டெலிபோனில் நேற்று ஆலோசனை செய்ததாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு ஒன்று கூறுகின்றது.

மேலும் இரு தலைவர்கள் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள கடும் ஆபத்து குறித்தும் பேசியதாகவும், அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.

Leave a Reply