வடகொரிய அதிபரை கொலை செய்ய அமெரிக்கா சதியா? திடுக்கிடும் தகவல்
உலகையே அணு ஆயுத சோதனை மூலம் அச்சுறுத்தி வரும் தலைவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங். இவர் ஒருவரால்தான் உலகம் முழுவதும் அச்சம் பரவி வருவதாகவும் அதனால் இவரை கொலை செய்ய அமெரிக்கா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது. மேலும் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு தென்கொரியாவும் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வடகொரியாவின் கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. சி.ஐ.ஏ. உளவு நிறுவன இயக்குனர் மைக் மெம்பியோ இந்த வாரத்தில் தென் கொரியா வர இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் தென்கொரியாவின் ‘என்.ஐ.எஸ்’ உளவு நிறுவன தலைவரை சந்திக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் வடகொரிய அதிபரை கொல்ல சதி திட்டம் தீட்ட உள்ளனர்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தினர் வட கொரியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய உள்ளனர். அவர்கள் மூலம் ரசாயன ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் மூலம் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.