பெண்கள் பெயரில் சொத்துப்பத்திரம் செய்தால் ரூ.1 மட்டுமே பத்திர செலவு. ஜார்கண்ட் முதல்வர் அதிரடி
பெண்கள் பெயரில் சொத்துப்பத்திரங்கள் பதிவு செய்தால் பத்திர செலவாக வெறும் ரூ.1 செலுத்தினால் போதும் என்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர்தாஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உ.பி.முதல்வர் யோகியை போலவே அதிரடி அறிவிப்புகளை அறிவிக்க முடிவு செய்த ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாச், முதல்கட்டமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பெண்களுக்கு பொருளாதார பாதுகாப்பு ஏற்படும் வகையிலும் பெண்கள் பெயரில் அதிக சொத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்/.
அவ்வாறு பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு செய்ய கட்டணமாக 1 ருபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்று ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் அறிவித்துள்ளார்.
தற்போது சொத்துக்கள் பதிவு செய்வதற்கு 7 சதவீதம் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பின் பயனாக பெண்கல் பெயரில் அதிக சொத்துக்கள் பதிவு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக எத்ரிபார்க்கப்படுகிறது. இதனால் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.