அதிசயம் ஆனால் உண்மை! ஒரே கூட்டணியில் அதிமுக-திமுக
அதிமுகவும் திமுகவும் கடந்த அரை நூற்றாண்டாக எதிர்க்கட்சிகளாக மட்டுமின்றி எதிரிக்கட்சிகளாக இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்ததே கிடையாது. ஆனால் இந்த கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று அட்ஜெஸ்ட் செய்து கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காணாமல் போய்விடும் என்று ஒரு அரசியல் விமர்சகர் கூறியதுண்டு
இந்நிலையில் இந்த வாக்கின்படி தற்போது திமுகவும், அதிமுகவும் ஒரே கூட்டணியில் இருக்க முடிவு செய்துள்ளன. விரைவில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்போது காய்களை நகர்த்த ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் களத்தில் குதித்துவிட்டன.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் பாஜகவின் கை தமிழக அரசியலின் பின்னணியில் உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை அதிமுகவின் இரண்டு அணிகளும் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழத்தில் அதிமுகவுக்கு மொத்தமுள்ள 134 எம்.எல்.ஏ.,க்களில் அதிமுக அம்மா அணிக்கு 122 எம்.எல்.ஏ.,க்களும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிக்கு 12 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். மொத்தம் 50 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் பன்னீருக்கு ஆதரவாக 11 பேரும் மற்றவர்கள் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாகவும் உள்ளனர். அதேபோல் திமுகவிற்கு அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு 4 எம்.பிக்கள் உள்ளனர். இந்த வாக்குகள் ஜனாதிபதி தேர்தலுக்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.