நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வரும் கொல்கத்தா போலீஸ்
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய நேற்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இன்று கொல்கத்தா போலீசார் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 பேர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து அவருக்கு மனநல சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த சோதனைக்கு ஒத்துழைக்க நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டதை அடுத்து அவரை கைது செய்து ஆறுமாதம் சிறையில் அடைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தற்போது சென்னையில் இருக்கும் நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலிசார் சென்னை வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது