பாராளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த பெண் எம்பி: வரலாற்று சாதனை
ஆஸ்திரேலிய நாட்டின் பாரளுமன்றத்தில் பெண் எம்பி ஒருவர் தாய்ப்பால் கொடுத்து சாதனை செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. மேலும் எந்த பாராளுமன்ற பெண் உறுப்பினரும் ஆஸ்திரேலிய வரலாற்றில் தன் குழந்தைக்கு பாராளுமன்றத்தினுள் தாய்ப்பால் கொடுத்தது இல்லை. இந்நிலையில் முதன்முதலாக பெண் எம்பி ஒருவர் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தனது இரண்டு மாத குழந்தைகளுக்கு பால் கொடுத்து சாதனை செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெண் எம்பியான லாரிசா வாட்டர்ஸ் என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் முக்கிய விவாதம் ஒன்றின் வாக்கெடுப்பு நடக்கவிருந்ததால் அவர் கண்டிப்பாக கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கைக்குழந்தையுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து வாக்கெடுப்பில் கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மடியில் இருந்த குழந்த அழ ஆரம்பித்தது. உடனே லாரிசா வாட்டர்ஸ் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் முதன்முதலாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.