சமாதானம் ஆகிறதா அமெரிக்கா-வடகொரியா: இறங்கி வந்த கிம் ஜோங் உன்

சமாதானம் ஆகிறதா அமெரிக்கா-வடகொரியா: இறங்கி வந்த கிம் ஜோங் உன்

அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் அணு ஆயுத சோதனை மூலம் சிம்மசொப்பனமாக இருந்த வடகொரியாவின் கொட்டத்தை அடக்க அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு தயார் செய்யப்பட்டது. அமெரிக்கா, வடகொரியா நாடுகளுக்கு இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் என்ற சூழ்நிலையில் தற்போது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மூன் ஜே, வடகொரியாவுடன் மோதல் போக்கை கைவிட்டு நட்புக்கரம் நீட்டுவதும் இந்த சமாதானத்திற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வட கொரியாவின் வெளியுறவுத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளில் ஒருவரான சோ சன் ஹுய் (Choe Son Hui), ”அமெரிக்கவுடன் சுமூகமாகப் போவதற்கு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்றும் இருப்பினும் ஒருசில நிபந்தனைகள் தங்களிடம் இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்த நிபந்தனைகளை கேட்க தயார் என்றே கூறப்படுகிறது. மூன்றாவது உலகப்போர் வந்தால் மனிதகுல அழிவிற்கே காரணமாகிவிடும் என்பதால் உலகில் உள்ள பல சமூக நல ஆர்வலர்கள் இந்த போரை தவிர்க்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

Leave a Reply