3 வயது மகனுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்

3 வயது மகனுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ கடந்த சில மாதங்களாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து அந்நாட்டு மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து வருபவர். ஓரினச் சேர்க்கையாளர் பிரச்னை, அகதிகள் வருகை என எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவரது அணுகுமுறையில் ஒரு மெச்சூரிட்டி தெரிவதாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அதனால் கனடாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் மதிக்கப்படும் ஒரு தலைவராக அவர் வலம் வந்து கொண்டிருக்கின்றார்

மேலும் சமூக வலைத்தளங்களில் நற்பெயருக்காக அதிகம் பகிரப்படும் அதிபர் ஜஸ்டின் ட்ருடியு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தனது மூன்று வயது மகன் அட்ரீயாங் ட்ருடியு உடன், நேற்று பிரதமர்அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் தனது மகனுடன் விளையாடி நேரம் செலவிட்டுள்ளது மட்டுமின்றி தனது பணியை செய்யவும் சிறிதும் தவறவில்லை. மகனுடன் மகிழ்ச்சிகரமாக செலவிட்ட தருணத்தை, புகைப்படங்களாக எடுத்து தள்ளியுள்ளார். அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, தற்போது பெரிதும் வைரலாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply