சிபிஐ ரெய்டு குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறியது என்ன?

சிபிஐ ரெய்டு குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறியது என்ன?

நேற்று காலை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் வீடு உள்பட அவர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த ரெய்டு குறித்து கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். அரசியலுக்காக என் வீடு அலுவலகத்தில் சி.பி.ஐ.சோதனை நடத்தப்பட்டது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரிதியாகவும் இந்த சவாலை ஏதிர்கொள்வேன்’ என்று கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு அனுமதியளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. மேலும் கார்த்திக் சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், திகார் சிறையில் அவருக்கு இடம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் திடுக்கிடும் வதந்தி ஒன்று உலாவி வருகிறது.

Leave a Reply