தோனி அதிரடியால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற புனே

தோனி அதிரடியால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற புனே

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் பிளே ஆப் போட்டியில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு புனே அணி தகுதி பெற்றது. இன்றைய போட்டியில் தல தோனி 26 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் குவித்தார்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் புனே மற்றும் மும்பை மோதிய இந்த போட்டியில் புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 162 ரன்கள் குவித்தது. திவாரி 58 ரன்களும், ரஹானே 56 ரன்களும், தோனி 40 ரன்களும் எடுத்தனர்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இருப்பினும் இரண்டாவது பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை மோதும் ஒரு வாய்ப்பை பெறுகிறது

மூன்று விக்கெட்டுக்களை எடுத்த புனே அணியின் வாஷிங்டன் சுந்தர் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply