காளீஸ்வரி நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு

காளீஸ்வரி நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு

கோல்ட் வின்னர் சமையல் எண்ணெய் உள்பட பல பொருட்களை தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய் உள்பட பல பிரபல பிராண்டுகளின் தயாரிப்பு நிறுவனம்தான் காளீஸ்வரி ரிஃபைனரி. இந்த நிறுவனம், சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் தனக்கு வருமானத்தில் இருந்து முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று தொடர்ந்து வந்த புகார் காரணமாக திடீரென இன்று காலை இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கு பின்னரே என்னென்ன ஆவணங்கள் கிடைத்தது என்பது குறித்து கூற முடியும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply