இதுதான் இந்த வருட சம்மர் ஸ்பெஷன் ஜீன்ஸ்
கடந்த சில வருடங்களுக்கு முன் சாயம் போன துணி போல அறிமுகமானதுதான் ஜீன்ஸ் உடை. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடையே விருப்பத்துக்குரிய உடையாக மாறிய ஜீன்ஸ் நாளடைவில் ஆங்காங்கே கிழிந்து போய் புதிய டிசைனாக மாறியது.
இந்த நிலையில் கீழே உள்ள படத்தில் பார்க்கின்றீர்களே, அதுதான் இந்த வருடத்திய புதிய மாடல் சம்மன் ஜீன்ஸ்ஸாம். கடந்த வாரம் இங்கிலாந்தில் அறிமுகமாகியுள்ள இந்த ஜீன்ஸ் தற்போது நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது.
300 பவுண்டு விலையில் விற்பனையாகி வரும் இந்த ஜீன்ஸ்ஸின் அடிப்பாகத்தை கழட்டிவிட்டால் உள்ளாடையாகவோ அல்லது வீட்டில் ஓய்வாக இருக்கும்போதோ பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மாடல் ஜீன்ஸ் மிக விரைவில் இந்தியாவுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.