‘விவேகம்’ படத்தை முந்திய ‘விஜய் 61’ படம்
அஜித் நடித்து முடித்துள்ள ‘விவேகம்’ படமும், விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படமும் வியாபாரத்தை தொடங்கிவிட்டது. ‘விவேகம்’ படம் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியை தொடங்கியுள்ள நிலையில் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது. ஆனால் டைட்டில் கூட வைக்காத விஜய் படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டதை கோலிவுட் ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ‘விவேகம்’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை ரூ.7.2 கோடிக்கு கோல்ட்மைன் என்ற நிறுவனம் பெற்றதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அதே கோல்ட்மைன் நிறுவனம் ‘விஜய் 61’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை ரூ.10.8 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
எனவே முதல்கட்ட வியாபாரத்தில் விவேகம் படத்தை விஜய்61 படம் முந்திவிட்டதாகவே தெரிகிறது.