10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு. வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு. வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியானது. இந்த தேர்வில் 94.4% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்,. வழக்கம் போல் இந்த வருடமும் மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது. மாணவர்கள் 92.5 சதவீதமும், மாணவிகள் 96.2 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் 98.54 சதவீத தனியார் பள்ளி மாணவர்களும், 91.59 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிதத்தில், 13,759 பேரும், சமூக அறிவியலில் 61,115 பேரும், அறிவியலில்ல் 17,481 பேரும், தமிழில் 69 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். ஆங்கிலப்பாடத்தில் யாரும் முழுமதிப்பெண் பெறவில்லை.

மாணவர்கள் இடையே பாகுபாடு மற்றும் மன உளைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக ரேங்க் முறை இந்த ஆண்டு நீக்கப்பட்டது. எனவே மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள் மற்றும் பாடவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply