மீண்டும் தொடங்குகிறது ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்
முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவிகாலத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் அனந்தகிருஷ்ணன் நடத்தி வந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட் இது தொடர்பாக 4 வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு வெகுவிரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு முடிந்துவிட்டதாக நிம்மதி பெருமூச்சில் இருந்த மாறன் சகோதரர்களுக்கு மீண்டும் இந்த வழக்கு உயிர்ப்பெற்று வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.