பிப்பா மிடில்டன் தேனிலவு செல்லும் அழகிய தீவு இதுதான்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் அவர்களின் மனைவி கேத் மிடில்டனின் சகோதரி பிப்பா மிடில்டனின் திருமணம் நேற்று நடந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜேம்ஸ் மாத்யூஸ் எனப்வரை நேற்று இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார் பிப்பா மிடில்டன்
இந்த தம்பதிகள் நாளை தேனிலவுக்கு ஒரு அழகிய தீவு ஒன்றுக்கு செல்லவுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள தாஹித்தி என்ற அழகிய தீவுக்கு தேனிலவுக்கு செல்லவுள்ள இந்த தம்பதிகள் அங்குள்ள ஆடம்பரமான சொகுசு பங்களாவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு இரவுக்கு 3000 பவுண்டுகள் வாடகையுள்ள வில்லா ஒன்றில் அவர்கள் ஒருவாரம் தங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வில்லவில் உள்ள வசதிகள், அழகிய தோற்றம் குறித்த புகைப்படங்கள் இங்கிலாந்து ஊடகங்களில் வெளிவந்துள்ளது. நமது வாசகர்களுக்காக அந்த படங்கள் இதோ: