ஐபிஎல் 2017: ஒரு ரன்னில் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒரே ஒரு ரன்னில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாண்ட்யா 47 ரன்கள் எடுத்தார்.
இதனால் 130 ரன்கள் எடுத்தால் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் புனே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 44 ரன்கள் அடித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் மும்பை அணியினர்களின் சீரான பந்துவீச்சால் ரன் எடுக்க புனே அணியினர் திணறினர். இந்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் ஸ்மித் இருந்தும் அந்த அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 9 பத்து ரன்களே எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. KH பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.