ரஜினிக்கு பாதுகாப்பு கொடுங்கள்: போலீஸ் கமிஷனரிடம் இந்து அமைப்பு புகார்

ரஜினிக்கு பாதுகாப்பு கொடுங்கள்: போலீஸ் கமிஷனரிடம் இந்து அமைப்பு புகார்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சமாக இருந்த நிலையில் ஊடகங்களுக்கு கிடைத்த சரியான தீனியாக ரஜினியின் அரசியல் பேச்சு வெளிவந்தது. ரஜினியின் அரசியல் பேச்சு யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட ரஜினியின் அரசியல் பேச்சை கூர்ந்து கவனித்து வந்தன.

இந்த நிலையில் ஒருசில சில்லறை கட்சியினர் ரஜினியை எதிர்த்து அரசியல் செய்தால்தான் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில் ரஜினிக்கு எதிராக அறிக்கைகள் விடுத்தும், கொடும்பாவி எரித்தும் விளம்பரம் தேடி வருகின்றன., இந்த நிலையில் அகில இந்திய இந்து சேனா என்ற அமைப்பு ரஜினிக்கு பாதுகாப்பு தரக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது.

தமிழக மக்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ள ரஜினியை சில அரசியல் கட்சி தலைவர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்வதோடு, அவரது உருவபொம்மையையும் எரித்து வருகின்றனர். எனவே ரஜினிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளது.

Leave a Reply