கோவை மருத்துவமனையில் ஓபிஎஸ் திடீர் அனுமதி ஏன்?

கோவை மருத்துவமனையில் ஓபிஎஸ் திடீர் அனுமதி ஏன்?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவையில் உள்ள ஆரிய வைத்திய சாலையில் புத்துணர்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் முதல்வர் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் பதவி ஆசையால் முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிமுகவின் தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் அவர்கள் சசிகலா சிறை சென்ற பின்னர் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக உருவாக முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஓபிஎஸ் தற்போது உடல் சோர்வை நீக்கும் வகையில், கோவையில் உள்ள ஆரிய வைத்தியசாலையில், ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ், அடுத்த 2 நாட்களுக்கு, புத்துணர்வு சிகிச்சைகள் பெற உள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply