மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: மேலும் இரண்டு பேர் கைது
கடந்த திங்கள் அன்று அதிகாலை மான்செஸ்டர் நகரில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான 23 வயது சல்மான் அபேதி மனித வெடிகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இந்த தாகுதல் தொடர்பாக ஏற்கனவே அபேதியின் சகோதரர் உள்பட 6 பேர்களை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ள நிலையில் இன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்துடன் கைது எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இவர்களில் பெண் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் தெற்கு மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர், இன்னொருவர் அபேதிக்கு வெடிகுண்டு சப்ளை செய்தவர் என்றும் கூறப்படுகிறது.