இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது நோக்கியா 3310

இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது நோக்கியா 3310

மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 போன் விற்பனை இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய வடிவம் பெற்றுள்ள ‘நோக்கியா 3310’ போனின் விலை ரூபாய். 3,310-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நோக்கியா 3310 போனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 22 மணி நேரம் வரை அது நீடிக்கும் என்று நோக்கிய நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இதனால் இந்த போனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிதாக மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 உள்ள புதிய அம்சங்கள்

* மறுவடிவம் பெற்றுள்ள நோக்கியா 3310 பழைய வடிவத்தைக் காட்டிலும் பெரிய திரையை கொண்டுள்ளது. இதன் அளவு 2.4 இன்ச் ஆகும்.

* புதிதாக வெளிவரவுள்ள நோக்கியா 3310 வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் வெளிவரவுள்ளது.

* பழைய நோக்கியா 3310 போனில் மிகவும் கவரப்பட்ட கைபேசிப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டு நவீன காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது.

இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply