மாட்டிறைச்சி தடையை ஏற்க முடியாது. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

மாட்டிறைச்சி தடையை ஏற்க முடியாது. பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

மத்திய அரசு மாட்டிறைச்சியை நாடு முழுவதும் தடை செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த தடையை கேரள மாநிலம் ஏற்காது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இறைச்சிக் கூடங்களின் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் படி மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறைக்கு எதிரானது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது, ஏழை மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை

மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே அதனை கேரள அரசு ஏற்காது என்று கூறியுள்ள முதல்வர் மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply