தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு தரமுடியாதது மிக முக்கிய பிரச்சினை: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்
வேலையில்லாததை விட தகுதிக்கும் குறைவான வேலையில் இருப் பதே முக்கிய பிரச்சினை என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் ஒருவர் செய்ய வேண்டிய வேலையை இரண்டு நபர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் செய்துவருகின்றனர் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நிதி ஆண்டு களுக்கான வரைவு செயல் திட்டத் தை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை அனைத்து முத லமைச்சர்கள், அரசாங்கத்தின் முக் கியமான குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சம்பளம் உள்ள வேலை களையும், அதிக உற்பத்தி திறன் இருக்கும் வேலைகளை உருவாக்குவதும் முக்கியமான கடமையாகும்.
தேசிய மாநில ஆய்வு அலு வலகத்தின் கணிப்புபடி (என்எஸ் எஸ்ஓ) கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப் பின்மை நிலையாக இருந்துவரு கிறது. மாறாக சொல்ல வேண்டும் என்றால், வேலைவாய்ப்பு வளர்ச்சி யால் இந்தியாவின் வளர்ச்சி இருக்கவில்லை.
கடந்த 2012 நிதி ஆண்டின்படி, 49 சதவீதத்தினருக்கு விவசாயம் வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் இந்திய ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 17 சதவீதம் மட்டுமே.
கடந்த 2011-ம் நிதி ஆண்டை எடுத்துக்கொண்டால், 20 பணியாளர்களுக்கு கீழ் உள்ள உற்பத்தி துறை நிறுவனங்களின் பங்கு 72 சதவீதமாக இருக்கிறது.
சீனாவில் பணியாளர்களின் வயது அதிகரித்து வருவது, சம்பளம் அதிகமாக இருப்பது ஆகிய காரணங்களால் சீனாவில் முதலீடு செய்திருக்கும் பெரிய நிறு வனங்களை இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன்மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
உற்பத்தி துறையில் அதிக சம்பளத்துடன் மட்டுமல்லாமல், திறன் குறைந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதற்கு சீனா, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகள் முன் உதாரணமாக இருக்கின்றன.
சர்வதேச சந்தைக்கு தேவை யான உற்பத்தியை பூர்த்தி செய்யும் பட்சத்தில்தான் `மேக் இன் இந்தியா’ வெற்றிபெறும் என நிதி ஆயோக் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மோடி அரசு வேலைவாய்ப்பு களை உருவாக்க தவறிவிட்டது என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.