‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்குகளில் ஒன்று சுவாதி கொலை வழக்கு. நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் காலை வேளையில் பிசியாக இருக்கும் இடத்தில் நடந்த இந்த கொலை காவல்துறையினர்களையே அதிர செய்தது. சுவாதியை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்ற வாலிபர் தான் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முந்தைய நாள் ராம்குமார் புழல் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த வழக்கு புதிருடன் முடிவுக்கு வந்தது.
இந்த கொலை சம்பவத்தை மையமாக வைத்து தற்போது திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற டைட்டிலில் உருவாகியிருக்கும் இந்த படத்தை விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’ படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன், இயக்கியுள்ளார். இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=W0GZU-MhXfc