யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா: இந்தியாவை பிரித்து தனிநாடு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா: இந்தியாவை பிரித்து தனிநாடு கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

மேலும் கேரளா, புதுவை, மேற்குவங்கம் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வருகின்றனர். கேரளாவில் ஒரு படி மேலே போய் சாலையில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டுவிட்டரில் திராவிட நாடு என்ற தமிழ் ஹேஸ்டேக் கடந்த சிலமணி நேரமாக வைரலாகி வருகிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய திராவிட மொழி பேசும் மாநிலங்களை ஒன்றிணைத்து, இந்தியாவில் இருந்து பிரித்து திராவிட நாட்டை உருவாக்க வேண்டும் என்று நெட்டிசன்கல் டுவிட்டரில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திராவிட நாட்டிற்கு ’யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக ‘USSI’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply