மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்: விலை, வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்: விலை, வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்

லெனோவோவின் மோட்டோரோலா பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை வெளியிட்டதைத் தொடர்ந்து மோட்டோ இசட் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்தன. இந்நிலையில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உள்ளிட்ட சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் ஜூலை 17-ந்தேதி முதற்கட்டமாக கனடாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. கனடாவில் CAD 249.99 அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,004 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் எச்டி 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737M குவாட்கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்படலாம். இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2800 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வைபை மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.

மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் வசதி, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும்.

Leave a Reply