அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் சாட்டிலைட் போன் சேவை: பிஎஸ்என்எல் திட்டம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் சாட்டிலைட் போன் சேவை: பிஎஸ்என்எல் திட்டம்

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் சாட்டிலைட் போன் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தொலைத் தொடர்பு சேவை கிடைக்கும். இந்த சேவை மூலம் இயற்கைச் சூழல் பாதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சேவை அடுத்த 18 முதல் 24 மாதங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் பிஎஸ் என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் வாஸ்தவா தெரிவித்துள்ளார்.

கப்பல், விமானம் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாட்டிலைட் போன்கள் இயங்கும். சாட்டிலைட்டிலிருந்து நேரடியாக பூமியில் 35,700கிமீ க்கு சிக்னல்கள் கிடைக்கும். தற்போதைய தொலைத் தொடர்பு சேவையில் தொலைதொடர்பு கோபுரங்கள் 25 முதல் 30 கிமீ சுற்றளவுவரைதான் போன்களுக்கு சிக்னல்களை கடத்தும்.

இதற்கான இம்மார்சார்ட் என் கிற சேவையை பிஎஸ்என்எல் பயன்படுத்தும். தற்போது தொலை தொடர்பு கிடைக்காத பகுதிகளி லிருந்து இந்த சேவையை தொடங்கி படிப்படியாக அனைவருக்கும் கொண்டுவர உள்ளது. முதற்கட்ட மாக பேரிடர் மேலாண்மை, மாநிலகாவல் துறை, ரயில்வே, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு இந்த போன்களை வழங்க உள்ளது. தற்போது மிக சிறிய அளவிலேயே உள்ள சாட்டிலைட் போன் பயன்பாட்டை, பொதுமக்களுக்கு அனுமதிக்கும்பட்சத்தில் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மிகப் பெரிய மாற்றம் உருவாகும். தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணங்கள் குறையும் என்றார். தற்போது சாட்டிலைட் போன் களை இந்தியா இறக்குமதி செய் கிறது. அதிக மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் விலை குறைவ துடன், இங்கேயே தயாரிப்பதற் கான சாத்தியங்களும் உருவாகும் என்றார்.

தற்போது இந்த போன்கள் ரூ.40 ஆயிரம் விலைவரை உள்ளன. மேலும் சாட்டிலைட் போன் சேவையை டாடா கம்யூனிகே ஷன் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சேவை ஜூன் 30 க்கு பிறகு நிறுத்த உள்ளதுடன், அனைத்து இணைப்புகளும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்படுகிறது. தற்போது இந்தியாவில் 1,532 சாட்டிலைட் போன் இணைப்பு கள் அனுமதிக்கபட்டுள்ளன. இதில் பெரும்பாலான இணைப்புகள் பாது காப்பு படைகளிடம் உள்ளது. டிசிஎல் நிறுவனம் 4,143 இணைப்பு களை கப்பல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு பிரச் சினைகள் காரணமாக சாட்டிலைட் போன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதற்கான புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கி சாட்டிலைட் போன் சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply