பிரதமரின் காதை பதம் பார்த்த இளவரசியின் துப்பாக்கி: பெல்ஜியம் நாட்டில் பரபரப்பு

பிரதமரின் காதை பதம் பார்த்த இளவரசியின் துப்பாக்கி: பெல்ஜியம் நாட்டில் பரபரப்பு

பெல்ஜியம் நாட்டின் இளவரசி விளையாட்டு போட்டி ஒன்றை துவக்கி வைப்பதற்காக துப்பாக்கியால் மேல்நோக்கி சுட்டார். துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் காரணமாக அருகில் இருந்த பெல்ஜியம் பிரதமரின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதக செய்திகள் வந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்சில் 20 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை தொடக்கி வைப்பதற்காக அந்நாட்டு மன்னர் பிலிப்பின் இளைய சகோதரி ஆஸ்ட்ரிட் மற்றும் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் வருகை தந்திருந்தனர். விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்கும் வகையில் இளவரசி ஆஸ்ட்ரிட் சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார்.

பிஸ்டலில் இருந்து வெளிவந்த பயங்கர சப்தம் காரணமாக அருகே நின்று கொண்டிருந்த பிரதமர் சார்லஸ் தன்னுடைய காது கேட்கும் திறனை இழந்துள்ளார். இதன்பின்னர் பிரதமருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைவார் எனவும் அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply