பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை: ராஜஸ்தான் கோர்ட் அதிரடி யோசனை
ஒரு பக்கம் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ராஜஸ்தான் கோர்ட் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.,
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கேரளா, புதுவை, மேற்குவங்கம், திரிபுரா உள்பட பல மாநிலங்களின் அரசுகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் மத்திய அரசு கொண்டு வந்த மாட்டிறைச்சி விற்பனைக்கு சென்னை ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ஐகோர்ட்டிலும் இதுபோன்ற ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த ராஜஸ்தான் ஐகோர்ட், பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இரண்டு நீதிமன்றங்கள் வெவ்வேறு உத்தரவை பிறப்பித்திருப்பதால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்,.