சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை
சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை…
* நல்ல பிராண்ட் சன்ஸ்க்ரீன்களையே வாங்க வும். காலாவதி தேதி பார்க்க மறக்க வேண்டாம்.
* சன்ஸ்க்ரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF – Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தைக் காக்கவல்லது என்பதற்கான குறியீடு. `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்க்ரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம் ஊர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க `எஸ்பிஎஃப்’ 30 தேவைப்படும்.
* முகத்துக்கு மட்டும் அல்லாது வெயில் படும் இடங்களான கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும்.
* சன்ஸ்க்ரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் செல்லலாம்.
* என்னதான் சன்ஸ்க்ரீன் பயன்படுத் தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்கவும். தொடர்ந்து வெயிலில் இருக்க நேரிட்டால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளைசெய்து கொள்ளவும்’’
வீட்டிலேயே ஹோம்மேட் சன்ஸ்க்ரீன் பேக்குகள் செய்து பயன்படுத்த பரிந்துரைகள்…
* வறண்ட சருமம் உள்ளவர்கள் விட்டமின்கள் கொண்ட பழங்களை கூழாக்கி பேக் செய்து பயன்படுத்தலாம். பழுத்த பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி, 2 ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து, இதனோடு அரை ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.
* ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும், தேவையான அளவு முல்தானிமட்டி பவுடரில் பன்னீர் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி முழுமையாக காயவிட்டுக் கழுவலாம்.
* நார்மல் சருமம் உள்ளவர்கள் ஒரு முழு உருளைக்கிழங்கின் சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து வெயிலால் கறுத்துப்போன பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.