இங்கிலாந்து பிரதமர் தேர்தல் பிரசாரத்திற்கு இந்தி பாடல்
இங்கிலாந்தில் பிரதமராக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தெரசா மே, தேர்தலில் பிரசாரம் செய்ய இந்தி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் ஜூன் 8ம் தேதி நடைப்பெற உள்ளது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 16 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த தேர்தலில் இந்தியர்களை கவரும் பொருட்டு ‘தெரசா கி சாத்’ (தெரசா உடன்) என்ற இந்தி வீடியோ பாடலை தயார் செய்துள்ளது கன்சர்வேடிவ் கட்சி.
இந்த பாடல் இங்கிலாந்து முழுவதும் தற்போது இசைக்கப்பட்டு வருகின்றது. தெரசா மே பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் இப்பாடல் கேட்கின்றது. இதன் மூலம் இந்தியர்களின் வாக்கு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் தெரசா மே.
இந்த வீடியோவில் தெரசா மே இந்தியாவுக்கு வந்த நிகழ்வு, பிரதமர் மோடியை சந்தித்த நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.