2வது நாளாக தொடர்ந்து எரியும் சென்னை சில்க்ஸ். அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றம்
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி மக்களை பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தால் இந்த பகுதியில் சுமார் ரூ.50 கோடி அளவில் வர்த்தம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது புகை மூட்டம் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பு கருதியும், போலிசாரின் அறிவுரையின்படியும் வெளியேறி வரும் மக்கள் புகைமூட்ட நிலைமை சரியானவுடன் வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏழு மாடிகளிலும் தீ பரவிவிட்டதால் கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க சுமார் 450 வீரர்கள் போராடி வருகின்றனர். ரசாயனப்பவுடன் உள்பட பல முயற்சிகள் செய்தும், உள்ளே இருப்பது அனைத்தும் துணி என்பதால் தீயின் கோரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை
இன்று அதிகாலை கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்துவிட்ட நிலையில் சுமார் 7மணி அளவில் கட்டத்தின் உள்பகுதியில் 2வது மாடி முதல் 7வது மாடி வரை இடிந்துவிழுந்துவிட்டது. இருப்பினும் தீயின் தாகம் இன்று மாலைதான் குறையும் என்று கூறப்படுகிறது.