ஆக்சிஜன் இல்லாமல் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை செய்த முதல் இந்திய குழு
உலகின் மிக உயர்ந்த சிகரம் என்ற பெருமையை பெற்ற எவரெஸ்ட் சிகரத்தை ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஏறி இந்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலகின் மிக உயரமான சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் ஆகும். இந்த சிகரத்தில் ஏறி சாதனை செய்வோர் பலர் ஆக்சிஜனை கையில் எடுத்து கொண்டு தான் சாதனை செய்து வந்தனர்.
இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தவர்களின் எண்ணிக்கை 4000க்கும் அதிகம் ஆகும். இவர்களில் 187 இந்தியர்கள் தனித்தனியாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி ஏறி சாதனை படைத்துள்ளனர். ஆனால் முதல்முறையாக ஒரு குழுவாக ஆக்சிஜன் இன்றி தற்போது தான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளது. இந்த சாதனையை குஞ்சோ டென்டா, கெல்ஜங் டோர்ஜி பூட்டியா, கெல்டன் பஞ்சூர், சோனம் புன்ஸ்சோக் என்று குழு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்னோ லைன் எவரெஸ்ட் பயணக்குழுவின் தலைவர் விஷால் துபே செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் குழு என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.