உதயநிதியின் அடுத்த படத்தை இயக்கும் பிரியதர்ஷன்
நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெற தவறிய நிலையில் அவர் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, மற்றும் ‘இப்படை வெல்லும் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மேலும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கோபுர வாசலிலே’, ‘சினேகிதியே’, ‘லேசா லேசா’, ‘காஞ்சிவரம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களையும் ஏராளமான மலையாள திரைப்படங்களையும் இயக்கிய பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல ஹீரோயின் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை மன்சூட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சந்தோஷ் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.