ஆட்சியை தக்க வைப்பாரா தெரஸா மே: இன்று இங்கிலாந்து பொதுத்தேர்தல்
இங்கிலாந்து நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் மூன்று முறை தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல்களை நடத்திய நிலையில் அந்நாட்டு மக்கள் கடும் பதட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் இன்று அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இப்போதைய பிரதமர் தெரஸா மே ஆட்சியை தக்க வைத்து கொள்வாரா? என்பதற்கு இந்த தேர்தலின் முடிவு விடையளிக்கும்
இங்கிலாந்தில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளதாகவும் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தல் குறித்து இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகளின்படி தெரஸா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கு 41.6 சதவீதம் பேர் ஆதரவும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 40.4 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.