மத்தியபிரதேசத்தில் ராகுல் காந்தி கைது! வட மாநிலங்களில் பரபரப்பு
மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர் போராட்டம் நடந்து வருவதால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்த நிலையில் சற்று முன்னர் மத்திய பிரதேசத்தில் தடையை மீறி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல்காந்தி போலிசாரால் மறிக்கப்பட்டுஅதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் கைது செய்தி இந்தியா முழுவதிலும் பரவி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=O53SZonsN20