வழுக்கைத்தலை ஆண்கள் குறிவைத்து கொல்லப்படும் அதிர்ச்சி சம்பவம். காரணம் என்ன தெரியுமா?
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் என்ற நாடு கல்வியறிவில் பின் தங்கிய நாடு மட்டுமின்றி பல ஆண்டுகளாக மூடநம்பிக்கையில் ஊறிப்போன ஒரு நாடும் ஆகும்.
இங்கு ஒரு வதந்தியை மிக எளிதாக பரவிவிடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது வழுக்கை தலை உள்ளவர்களின் மண்டை ஓட்டில் தங்கம் இருக்கின்றது என்பதுதான் அந்த வதந்தி
இதனால் வழுக்கைத்தலலயில் உள்ள தங்கத்தை எடுக்கும் வகையில் வழுக்கை தலை ஆண்களை குறிவைத்து ஒரு கும்பல் கொலை செய்து வருகிறது. இதுவரை 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் வழுக்கை தலை ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.