பிரிட்டன் தேர்தல் : கூட்டணி ஆட்சிக்காக சிறிய கட்சிகளிடம் கையேந்தும் தெரசா மே

பிரிட்டன் தேர்தல் : கூட்டணி ஆட்சிக்காக சிறிய கட்சிகளிடம் கையேந்தும் தெரசா மே

பிரிட்டனில் நடைப்பெற்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கன்சர்வேடிவ் கட்சியின் தெரசா மே சிறிய கட்சிகளிடம் கூட்டணிக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 தொகுதிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இதற்கு முரணாக தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

நடத்து முடிந்த தேர்தலில் இதுவரை வெளியான 643 தொகுதிகளுக்கான முடிவுகளில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 261இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 326 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்ற நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போதிய இடங்களில் வெற்றி பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிட்டவில்லை என்றாலும் வடக்கு ஸ்காட்லாந்து தேசிய கட்சி அல்லது அயர்லாந்து ஜனநாயக யூனியன் கட்சியுடன் இணைந்து கூட்டனி ஆட்சி அமைக்க தெரசாமே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆட்சி அமைத்தாலும், அரசியலில் தெரிசாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

Leave a Reply