எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றார்கள். சகாயம் ஐஏஎஸ் திடுக் தகவல்

எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றார்கள். சகாயம் ஐஏஎஸ் திடுக் தகவல்

தமிழகத்தின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் சகாயம் ஐஏஎஸ். இளைஞர்களின் வழிகாட்டியாக உள்ள அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலர் வற்புறுத்தியும் சமூக சேவைகள் மட்டுமே செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று  சென்னையில் தி.நகரில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சகாயம் ஐஏஎஸ் பேசியதாவது:

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என திரும்பத் திரும்ப சொல்வதால் தான் 26 வருடங்களில் 24 இடங்களுக்கு மாற்றப்பட்டேன். அதுக்காக என் கொள்கையில் நான் ஒருபோதும் தளர்ந்தது இல்லை. நான் மதுரை ஆட்சியராக இருந்த போது எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தர உள்ளதாக தகவல் வந்தது. தற்போதை சூழலில் எனக்கு சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருக்க பயமாக உள்ளது.

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு விசாரணை நடத்திய போது, நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துப்பு தரவில்லை. அசராத சகாயம் குழுவினர் புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து, உடலை ஆய்வு செய்த பின்னரே செல்வோம் என கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply